‘சின்னம்மா’ என்றெல்லாம் அழைக்க முடியாது..! முதல்வர் ‘பொளேர்’ அடி..! பீதியில் கார்டன்..!?

சசிகலா இதை ஓரளவு எதிர் பார்த்தார். ஜெ. இல்லை என்றால் பன்னீர் நம் பேச்சைக் கேட்க மாட்டார் என்று.

அதனால் தான் அடுத்த முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தினார். ஆனால், டெல்லிக்கு தெரியும் எடப்பாடி தங்கள் பேச்சைக் கேட்கமாட்டார் என்று.
அவர்கள் பன்னீரை தங்கள் பிடிக்குள் கொண்டு வந்தனர். டெல்லி நினைத்தபடியே பன்னீர் பிரதமரின் செல்லப் பிள்ளை ஆனார்.

நடிகர் சரத்குமார்,கருணாஸ்,சீமான்,வைகோ என வெளியில் இருந்தெல்லாம் சசிகலாவை சின்னம்மா..சின்னம்மா என்று வாய் நிறைய அழைக்க பன்னீர் மட்டும் வாய் திறக்கவே இல்லை.
இது சசிகலா தரப்பில் கடும் கோபத்தை உண்டு பண்ண, தூது போனார்கள் சசியின் அடிப்பொடிகள். என்னது நான் சின்னம்மான்னு சொல்லனுமா..? என்று சீறிய முதல்வர்,
எனக்கு என்னை பெத்த அம்மாவை விட ஜெ.,அம்மா தான் அம்மா. சாகுற வரைக்கும் அம்மா மட்டும் தான். போய் உன் வேலையைப் பாரு என்று சொல்லி அனுப்பினாராம்.

டெல்லி போகும் முன்பே இந்த போடு போட்டவர், வந்து ஆடிய ஒரு ஆட்டத்தில் கோட்டையே கதி கலங்கிப் போய் இருக்கிறது.

இந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் பொதுக் குழு கூட இருக்கிறது. சசி டீம் பீதியில் உறைந்து போய் இருக்கிறது..!

அசத்துங்க முதல்வர் பன்னீர் சார்..மக்களும் இளைஞர்களும் உங்களிடம் நிறைய எதிர் பார்க்கிறோம்..வாழ்த்துக்கள்.

Related posts

Leave a Comment